Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (29 மார்ச் – 4 ஏப்ரல் 2026)
04/04/2026 Duración: 06minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (29 மார்ச் – 4 ஏப்ரல் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
-
‘சிறைக்கைதிகளின் குடும்பங்கள் வாழ்வில் உயர்வதை காண்பதே எனக்கு திருப்தி தருகிறது’
03/04/2026 Duración: 13minஅருட்சகோதரி லூர்துமேரி அவர்கள் தமிழக சிறைகளில் வாடும் கைதிகளின் நலன்களுக்காக கிறிஸ்தவ அமைப்புகளுடன் இணைந்து பணி செய்து வருகிறார். அவர் மாதா இருதய சபை (Immaculate Heart of Mary Congregation – Pondicherry) எனும் சபையை சார்ந்தவர். அவரின் பணி குறித்தும், சிறைவாசிகளின் அனுபவங்கள், அவர்களின் குடும்ப நிலை என்று பல அம்சங்கள் குறித்தும் அருட்சகோதரி லூர்துமேரியுடன் காலந்துரையாடுகிறார் றைசெல். பாகம் 2
-
‘தவறு செய்த மனிதனை கைவிடுவது மனித நேயமல்ல’
03/04/2026 Duración: 12minஅருட்சகோதரி லூர்துமேரி அவர்கள் தமிழக சிறைகளில் வாடும் கைதிகளின் நலன்களுக்காக கிறிஸ்தவ அமைப்புகளுடன் இணைந்து பணி செய்து வருகிறார். அவர் மாதா இருதய சபை (Immaculate Heart of Mary Congregation – Pondicherry) எனும் சபையை சார்ந்தவர். அவரின் பணி குறித்தும், சிறைவாசிகளின் அனுபவங்கள், அவர்களின் குடும்ப நிலை என்று பல அம்சங்கள் குறித்தும் அருட்சகோதரி லூர்துமேரியுடன் காலந்துரையாடுகிறார் றைசெல். பாகம் 1
-
From Sri Lanka to the Global Stage: A Tamil Karate Champion’s Journey - இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா, உலகமேடை: கராத்தேயில் சாதிக்கும் தமிழன்
03/04/2026 Duración: 15minRossy Harinth Ratnam is a 6th Dan Black Belt, an international karate competitor, and a highly respected coach. From his early beginnings in Sri Lanka to his continued success in Australia, he has earned a strong reputation for developing high-performing athletes and leading teams at elite levels, including representing Victoria at national championships. He is also actively involved in international training camps, helping shape the next generation of karate athletes. Our producer, Praba Maheswaran, speaks with him about his journey and achievements. - இலங்கையில் (யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, யாழ் பரியோவான் கல்லூரி) தொடங்கி ஆஸ்திரேலியா வரை கராத்தே பயணத்தில் தனது தடத்தைப் பதித்துள்ள ஒருவர் Rossie Harrinth Ratnam அவர்கள். 6th Dan Black Belt, சர்வதேச போட்டியாளர், திறமையான பயிற்சியாளர், விக்டோரியா மாநிலத்தை தேசிய மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு ஆஸ்திரேலியா சார்பில் சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார் Rossie Harrinth Ratnam. அவரின் சாதனைகள், மற்றும் கராத்தே பற்றிய பல விடயங்கள் பற்றி அவருடன் உரையாடுகிறா
-
செய்தியின் பின்னணி: உடல்நலம் - நாம் யாரை நம்புகிறோம்? சமூக ஊடகங்கள் Or மருத்துவர்?
03/04/2026 Duración: 07minசமூக ஊடகங்கள் மூலம் பரவி வரும் Peptides என்ற புதிய சுகாதாரப் போக்கானது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. உடல் எடையை விரைவாகக் குறைக்க, இளமையாகத் தோன்ற, அல்லது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க...... இது பாதுகாப்பானதா, அல்லது நம் உடல்நலத்திற்கு ஒரு மறைமுக ஆபத்தா? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
How to buy Indigenous art and craft ethically in Australia - பூர்வீகக் கலை மற்றும் கைவினைப் பொருட்களை சரியான முறையில் வாங்குவது எப்படி
03/04/2026 Duración: 07minBuying Aboriginal and Torres Strait Islander art can be meaningful, but how do you know if it's real and ethical? Fake art is still a problem in Australia, and protections are still developing. This guide helps you understand what to look for, what questions to ask, and where to buy safely. By choosing carefully, you can support First Nations artists and their communities. - ஆஸ்திரேலியாவில் பூர்வீகக் கலை மற்றும் கைவினைப் பொருட்களை சரியான முறையில் வாங்குவது எப்படி என்பது தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
இன்றைய செய்திகள்: 03 ஏப்ரல் 2026 - வெள்ளிக்கிழமை
02/04/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 03/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
தமிழக தேர்தல் களம் – 3 ஏப்ரல் 2026
02/04/2026 Duración: 09minதமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பின்னணியில் தமிழக தேர்தல் கள நிலவரத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
-
புதிய விண்வெளி வரலாறு: நிலவை நோக்கி நாசாவின் விண்கலம் வெற்றிகரமாக புறப்பட்டது
02/04/2026 Duración: 09minArtemis II திட்டத்தின்கீழ் நிலவை நோக்கி நாசாவின் விண்கலம் வெற்றிகரமாக புறப்பட்டது. இதன் பின்னணியை விளக்குகிறார் உயிர்மெய்யார்.
-
Celebrating Excellence in Teaching: Dr Poomahal Kumar Receives RCPA Award - புகழ்பெற்ற RCPA Konrad Muller Award விருதால் கௌரவிக்கப்பட்ட டாக்டர் பூமகள் குமார்
02/04/2026 Duración: 14minDr Poomahal Kumar, Laboratory Haematologist) at Royal North Shore Hospital Laboratory, Coordinator of the NSW/ACT Haematology Teaching Program and Senior Clinical Lecturer, University of Sydney, has been awarded the prestigious Konrad Muller RCPA(Royal College of Pathologists of Australasia) Award for Excellence in Teaching. This recognition reflects her outstanding dedication to education and her impact on training future pathology professionals. In this interview with Praba Maheswaran, Dr Kumar shares her professional journey, teaching philosophy, and insights into shaping the next generation in pathology. - நோயியல் நிபுணரும்(pathologist) அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியருமான(educator) டாக்டர் பூமகள் குமார் (Dr Poomahal Kumar - Senior Staff Specialist (Laboratory Haematologist) at Royal North Shore Hospital Laboratory, Coordinator of the NSW/ACT Haematology Teaching Program and Senior Clinical Lecturer, University of Sydney), கற்பித்தலில் சிறந்த சாதனைக்காக வழங்கப்படும் Konrad Muller RCPA (Royal College of
-
அயலவர்களை அரவணைப்போம்
02/04/2026 Duración: 09minஅயலவர்களுடன் அந்நியோன்யமாக வாழவேண்டும் என்ற தத்துவத்துடன் ஆஸ்திரேலியாவில் 2003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு நாள் அயலவர்கள் நாள். இது குறித்து 2014ஆம் ஆண்டு நாம் ஒலிபரப்பிய விவரணத்தில் சிட்னியில் வசிக்கும் ராஜா வரதராஜாவும், மெல்பேர்ணில் வாழும் திருமதி கலா சிறீபாலனும் தத்தமது அயலவர்கள் குறித்த கருத்துகளைக் கூறுகிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு: குலசேகரம் சஞ்சயன்.
-
செய்தியின் பின்னணி: ஏன் ஆஸ்திரேலிய குடும்பங்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்?
02/04/2026 Duración: 16minபெரிய குடும்பங்களைக் கொண்ட ஒரு எதிர்காலக் கண்ணோட்டத்தை, Nationals கட்சியினர் முன்வைத்துள்ளனர். குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் கொள்கைகள் புதியவை அல்ல – ஆனால் அந்தக் கொள்கைகள் கட்சி சார்புடையவையாகத் தெரிகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
Smoke alarm தொடர்பில் நாம் தவறாமல் கவனிக்க வேண்டிய விடயங்கள்
02/04/2026 Duración: 09minSmoke alarm என்பது நமது ஒவ்வொருவருடைய வீடுகளிலும் இருக்கவேண்டிய முக்கியமான அம்சம் என்பது நமக்குத் தெரியும். இந்த Smoke alarm தொடர்பில் நாம் தவறாமல் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து விளக்குகிறார் மின்பொறியாளரும் சிட்னியில் பலவருடங்களாக Electrician ஆகப் பணியாற்றிவருபவருமான சூரியகுமார் வைத்தியலிங்கம் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 02 ஏப்ரல் 2026 - வியாழக்கிழமை
01/04/2026 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 02/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
ஈரானின் Kharg தீவை கைப்பற்ற ஏன் அமெரிக்கா திட்டமிடுகிறது?
01/04/2026 Duración: 08minஈரானின் Kharg தீவை கைப்பற்ற அமெரிக்கா திட்டமிடுகிறது என்று ஊடக செய்திகள் கூறுகின்றன. அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளை ஈரான் ஏற்கவில்லை என்றால் அமெரிக்கா இந்த தீவை நிர்மூலமாக்க நேரிடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருக்கிறர். இது தொடர்பான ஊடகங்கள் தரும் தகவல்களை தொகுத்தளிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
யார் டெஸி ஃப்ரீமன்? காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி?
01/04/2026 Duración: 08minவிக்டோரிய மாநில வரலாற்றிலேயே மிகப்பெரிய மனிதவேட்டைகளில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம் முதல் தேடப்பட்டு, பிடிக்க உதவினால் 10 இலட்சம் டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த டெஸி ஃப்ரீமன், திங்கட்கிழமை (30 March) காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் வாழ்ந்த சிறிய நகரமான போர்பங்காவில் காவல்துறை அதிகாரிகள் நீல் தாம்சன் மற்றும் வடிம் டி வார்ட்-ஹொட்டார்ட் ஆகியோரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த ஃப்ரீமன் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னணியை விளக்குகிறார் உயிர்மெய்யார்.
-
நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் கூறியது என்ன?
01/04/2026 Duración: 04minஎரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க ஆஸ்திரேலியர்கள் எவ்வாறு உதவலாம் என்பதை பிரதமர் Anthony Albanese விளக்கியுள்ளார்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலிய வானில் தோன்றவுள்ள ‘Pink நிலா’
01/04/2026 Duración: 02minஆஸ்திரேலிய வானில் ‘சூப்பர் பிங்க் மூன்’ காட்சியளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தமிழக தேர்தல் களம் – 1 ஏப்ரல் 2026
01/04/2026 Duración: 07minதமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பின்னணியில் தமிழக தேர்தல் கள நிலவரத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
சட்டம்: Australian Federal Police-ஐ எப்போது, எப்படி தொடர்புகொள்வது?
01/04/2026 Duración: 25minநாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில் Australian Federal Police-AFP தொடர்பில் அறிந்துகொள்வோம். இந்நிகழ்ச்சியில் இணைந்துகொள்கிறார்கள் AFPஐச் சேர்ந்த Dean Reynolds, Anisha Sharif மற்றும் விக்டோரிய காவல்துறை அதிகாரி ராஜேஷ் சாம்பமூர்த்தி ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.