Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
இன்றைய செய்திகள்: 01 ஏப்ரல் 2026, புதன்கிழமை
01/04/2026 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 01/04/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இலங்கை: இனப் பிரச்சினையைத் தீர்க்க தமிழ் கட்சிகள் இணைகின்றன
31/03/2026 Duración: 08minதமிழர் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள குழு நியமனம்; இணைந்து வரும் தமிழ் கட்சிகளிடையே இணக்கம். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
செய்தியின் பின்னணி: அரசின் வரிக் குறைப்பால் பெட்ரோல் விலை எவ்வளவு குறையும்?
31/03/2026 Duración: 05minநாட்டில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அரசு fuel excise- எரிபொருள் மீதான வரியை பாதியாகக் குறைத்துள்ளது. இது குறித்து SBS News-க்காக ஆங்கிலத்தில் Anna Henderson மற்றும் Sydney Lang எழுதிய விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்
-
மெல்பன் நகரத்தில் உருவாகிறது புதிய 'Little India'!
31/03/2026 Duración: 02minமெல்பன் நகரத்தில் “Little India” கலாசார மையத்தை அமைப்பதற்கு மெல்பன் City Council நிதி ஒதுக்கியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நகரங்களை விட்டு பிராந்தியங்களுக்கு குடிபெயரும் ஆஸ்திரேலியர்கள்: காரணம் என்ன?
31/03/2026 Duración: 02minஆஸ்திரேலியர்கள் தொடர்ந்து முக்கிய தலைநகரங்களை விட்டு பிராந்திய பகுதிகளுக்கு குடிபெயர்ந்து வருவதாக புதிய தரவுகள் கூறுகின்றன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 31 மார்ச் 2026 - செவ்வாய்க்கிழமை
30/03/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 31/03/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
செய்தியின் பின்னணி: உயரும் பெட்ரோல் விலை – ஈஸ்டர் விடுமுறை பயணத் திட்டங்களை மாற்றுகிறதா?
30/03/2026 Duración: 08minஅதிகரித்து வரும் பெட்ரோல் விலை மற்றும் தொலை தூர இடங்களுக்குப் பயணிக்கும் போது அது போதியளவில் கிடைக்குமா என்பது குறித்த அச்சம் காரணமாக, வரவிருக்கும் ஈஸ்டர் விடுமுறையின் போது பலர் நீண்ட தூர கார் பயணத் திட்டங்களைக் கைவிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிலர் பயணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள். வேறு சிலர் பயணத்திட்டத்தைச் சுருக்குகிறார்கள். இன்னும் சிலர், மிகக் கவனமாகப் பயணிக்கிறார்கள். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலியா அறிவோம்: டிங்கோ வேட்டை நாய்
30/03/2026 Duración: 08minஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய காட்டு நாய் டிங்கோ. அதிபயங்கரமாக வேட்டையாடும் நாய் என்றும், பூர்வீக குடி மக்களின் கலாச்சாரத் துணை என்றும், சிலருக்குச் சர்ச்சைக்குரிய Pest என்றும் அறியப்படுகின்ற, ஆஸ்திரேலியாவின் சின்னமான டிங்கோவைப் பற்றிய சிறப்பு தரவுகளைக் கொண்டு வருகிறார் உயிர்மெய்யார்.
-
இன்றைய செய்திகள்: 30 மார்ச் 2026 - திங்கட்கிழமை
30/03/2026 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 30/03/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா மாநிலத்தவர்களுக்கு இலவச பொதுப் போக்குவரத்து சலுகை
29/03/2026 Duración: 03minமத்திய கிழக்குப் போரின் தாக்கத்தால் எரிபொருள் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய மாநிலங்கள் இலவச பொதுப் போக்குவரத்து குறித்து வேறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (22 – 28 மார்ச் 2026)
28/03/2026 Duración: 05minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (22 – 28 மார்ச் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
-
How public and community housing works in Australia - Social housing: குறைந்த செலவில் உங்களுக்கான வீடொன்றைப் பெறுவது எப்படி?
27/03/2026 Duración: 09minIn Australia, government-subsidised rental housing is available for eligible households. Assessment is based on need under criteria that vary depending on your state or territory. Here’s what to expect when applying for different types of housing assistance, some common myths around social housing and where to reach out for help. - ஆஸ்திரேலியாவில் நீண்டகால அடிப்படையில் வாடகை வீடொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு கிடைக்கும் உதவி எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றியும் social housingக்காக விண்ணப்பிக்க நினைப்பவர்கள் எங்கு உதவி பெறலாம் என்பதைப் பற்றியும் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
உலக மேடையில் இந்திய குரல்: FIFA உதவி நடுவர் டோனி ஜோசப் லூயிஸ்
27/03/2026 Duración: 14minடோனி ஜோசப் லூயிஸ் அவர்கள், 2016 முதல் சர்வதேச அளவில் திறமையான FIFA உதவி நடுவராக பணியாற்றிவருகிறார். துல்லியமான முடிவுகள் மற்றும் நிலையான செயல்திறன் மூலம் பல சர்வதேச போட்டிகளில் பணியாற்றி, உலக கால்பந்து சமுதாயத்தில் தன்னுடைய இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அவரது பயணம், அர்ப்பணிப்பு, கட்டுப்பாடு மற்றும் விளையாட்டின் மீது கொண்ட ஆழ்ந்த ஆர்வம் போன்ற பல விடயங்களை அவர் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
தமிழ்த் தடம்: ஒளவையார்கள்
27/03/2026 Duración: 05minதமிழ் இலக்கிய மரபில் ஔவையார்களின் பங்களிப்புகள் குறித்த தகவலை முன்வைக்கிறார் தனபாலசிங்கம் அவர்கள்.
-
செய்தியின் பின்னணி: E10, E15, E20 போன்ற எதனோல் எரிபொருள்: மலிவான மாற்றுத் தீர்வா?
27/03/2026 Duración: 06minஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை பொதுமக்களுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. இதற்கான மாற்றுத் தீர்வாக எதனோல் கலந்த பெட்ரோல் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இது உண்மையில் பெட்ரோல் விலையைக் குறைக்குமா என்பதே தற்போது முக்கியமான கேள்வியாக உள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இன்றைய செய்திகள்: 27 மார்ச் 2026 - வெள்ளிக்கிழமை
26/03/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 27/03/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலியா அறிவோம்: Tasmania, பெருந்தீவில் ஒரு குட்டித் தீவு!
26/03/2026 Duración: 09minஆஸ்திரேலியாவின் ஒரே தீவு மாநிலம் டாஸ்மேனியா. இலங்கையை விடவும் சற்றே பெரிய தீவான டாஸ்மேனியா சுமார் 64,000 சதுர கி.மீ. பரப்பளவுடன் உலகின் 26-வது பெரிய தீவாக உள்ளது. இந்த தீவின் வரலாற்றை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
-
விக்டோரியாவில் இடம்பெற்ற விபத்தில் இந்திய இளைஞர் மரணம்
26/03/2026 Duración: 02minவிக்டோரியாவின் Bendigo அருகில் இடம்பெற்ற விபத்தில் இந்திய பின்னணி கொண்ட இளைஞர் மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
விக்டோரியர்களுக்கு தினமும் மூன்று மணி நேரம் இலவச மின்சாரம்!
26/03/2026 Duración: 02minவிக்டோரியாவில், வாரத்தின் ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கும் புதிய திட்டம் விரைவில் அறிமுகமாகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
"மறு சுழற்சி தமிழருக்குப் புதிதல்ல!"
26/03/2026 Duración: 15minவிக்டோரியா மாநிலத்தில் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒரு செயற்பாடாக, விக்டோரியா மாநில அரசு 2019ஆம் ஆண்டு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அது குறித்து விமர்சனம் செய்த RMIT பல்கலைக்கழக பேராசிரியர் உஷா ஐயர்-ரானிகா, தமிழருக்கு இது புதிய விடயம் இல்லை என்று எம்மிடம் அப்போது கூறியிருந்தார். 2019ஆம் ஆண்டு அவரை நேர்கண்டவர் குலசேகரம் சஞ்சயன். இது ஒரு மறு ஒலிபரப்பு