Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
நீங்கள் முதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா?
09/04/2026 Duración: 07minமுதுகுவலி என்பது நம்மை அடிக்கடி பாதிக்கும் ஒரு பிரச்சினையகும். இது குறித்த பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கனகரட்ணம் காண்டீபன் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். இந்நிகழ்ச்சி ஒரு மறுஒலிபரப்பு.
-
மன்னார் மண்ணில் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் தேடல் சர்ச்சையாகிறது
09/04/2026 Duración: 15minஇலங்கையின் வடமேற்குப் பகுதியிலுள்ள மன்னார் தீவிலிருந்து ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று இல்மனைட் மணலைத் தோண்டியெடுக்கத் திட்டமிடுகிறது. இது குறித்து Bridging Lanka என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Jeremy Ahamed Liyanage மற்றும் அதில் பணியாற்றும் றோஜன் ஆகியோரது கருத்துகளுடன் 2020ஆம் ஆண்டில் குலசேகரம் சஞ்சயன் படைத்த விவரணம் இது. இல்மனைட் சுரங்கங்கள் மன்னார் தீவில் அமைக்கப்படுவது குறித்து இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன என்று அறிந்து கொள்ள, சுரங்கங்களுக்கு அனுமதி வழங்கும் Geological Survey & Mines Bureau – புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தையும் Central Environmental Authority என்ற மத்திய சுற்றாடல் அதிகாரசபையையும் பலமுறை தொடர்பு கொண்டோம். அவர்களிடமிருந்து எந்தப்பதிலும் எமக்குக் கிடைக்கவில்லை. 2020ஆம் ஆண்டு ஒலிபரப்பான நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.
-
செய்தியின் பின்னணி: பெட்ரோல் நிலையங்கள் திட்டமிட்டே விலையை உயர்த்துகின்றனவா? மாநிலங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?
09/04/2026 Duración: 10minநாட்டில் பெட்ரோல் நிலையங்கள் திட்டமிட்டே விலையை உயர்த்துகின்றனவா? ஆஸ்திரேலிய மாநிலங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன? என்பது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சி. முன்வைக்கிறார் றைசெல்.
-
இன்றைய செய்திகள்: 9 ஏப்ரல் 2026 வியாழக்கிழமை
09/04/2026 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 9/04/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
-
வெளிநாட்டு மருந்துகளுக்கு அமெரிக்காவின் 100 சத வரி அறிவிப்பு ஆஸ்திரேலியாவை பாதிக்குமா?
08/04/2026 Duración: 08minஅமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்களுக்கு 100 சதம் வரி விதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பது ஆஸ்திரேலிய மருந்து நிறுவனங்கள், மற்றும் ஆஸ்திரேலியர்கள் மலிவாக மருந்துகள் வாங்கும் திட்டமான PBS திட்டத்தை பாதிக்கும் என்று சிலர் அஞ்சுகின்றனர். இது குறித்து விவரிக்கிறார் உயிர்மெய்யார்.
-
சூதாட்ட விளம்பரங்களுக்கான அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் எப்படி இருக்கும்?
08/04/2026 Duración: 08minஆஸ்திரேலியாவில் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் சூதாட்ட விளம்பரங்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும். ஆஸ்திரேலிய வரலாற்றில் சூதாட்டம் தொடர்பான மிக முக்கியமான சீர்திருத்தம் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் சிலர் இது போதாது என்று விமர்சிக்கிறார்கள். என்னென்ன புதிய கட்டுப்பாடுகள்? ஏன் இந்தத் தடைகள்? ஊடகங்கள் தரும் செய்திகளை விளக்குகிறார் உயிர்மெய்யார்.
-
சிட்னி தமிழர் சித்திரைப் புத்தாண்டு விழா!
08/04/2026 Duración: 11minசிட்னி தமிழர் அமைப்புகள் மற்றும் வர்த்தகர்கள் ஆதரவோடு தாயகம் குழுமம் வழங்கும் சிட்னி தமிழர் சித்திரைப் புத்தாண்டு விழா ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி சனிக்கிழமை NSW மாநிலத்தின் Merrylands, Pitt Street யில் அமைந்துள்ள Holroyd Gardens எனுமிடத்தில் நடைபெறுகிறது. இது குறித்து நம்முடன் கலந்துரையாடுகின்றனர்: ஜேம்ஸ் வடிவேலு சுகுமார் மாறும் ஞானமகள் அசோகன் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
-
தமிழக தேர்தல் களம் – 8 ஏப்ரல் 2026
08/04/2026 Duración: 08minதமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பின்னணியில் தமிழக தேர்தல் கள நிலவரத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
இன்றைய செய்திகள்: 08 ஏப்ரல் 2026, புதன்கிழமை
08/04/2026 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 08/04/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இலங்கை: ஏற்றம் காணும் விலைகள், திண்டாடும் மக்கள்
08/04/2026 Duración: 08minமத்திய கிழக்கு யுத்த நிலையை அடுத்து பிற நாடுகளைப் போலவே இலங்கையிலும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
உரிமை கோரப்படாத பல மில்லியன் டாலர்கள் Medicare rebate: உங்கள் பங்கும் இருக்கலாம்
07/04/2026 Duración: 02minகிட்டத்தட்ட 10 லட்சம் ஆஸ்திரேலியர்கள், Medicare-ரிட மிருந்து கிடைக்க வேண்டிய $272 மில்லியன்களை இன்னும் பெறாமல் உள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
போர் குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை முன்னாள் உறுப்பினர் கைது!
07/04/2026 Duración: 02minஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை (ADF) முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி: நாட்டில் புதிதாகப் பரவும் Flu தொடர்பில் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை
07/04/2026 Duración: 06minநாட்டில் புதிய Flu-காய்ச்சல் வகை வேகமாக பரவி வரும் நிலையில் அனைவரும் Flu தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தொற்று நோய் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இது குறித்து SBS News-க்காக ஆங்கிலத்தில் Greg Dyett எழுதிய விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்
-
இன்றைய செய்திகள்: 07 ஏப்ரல் 2026 - செவ்வாய்க்கிழமை
07/04/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 07/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
அவகாடோ பழுத்ததா அல்லது பழுதா? புதிய ஸ்கேனர் உடனே சொல்லும்
06/04/2026 Duración: 02minகடைகளில் வாங்கும் அவகாடோ பழம் காயா, பழமா, அழுகியதா என்பதை சோதிப்பதற்கான வசதி விரைவில் வருகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Think before you pack: Australia’s customs and biosecurity rules explained - பயணிகள் கவனத்திற்கு: ஆஸ்திரேலியாவிற்குள் என்னென்ன பொருட்களை கொண்டுவரமுடியாது?
06/04/2026 Duración: 10minCustoms is generally the first point of contact for people entering Australia. Our Border Force Officers are there waiting. They ensure that we don’t bring in prohibited goods that could threaten Australia’s unique environment, economy and communities. Before you zip up your suitcase, here’s what you need to know about what can—and can’t—cross the border, and what’s at stake if biosecurity rules are ignored. - ஆஸ்திரேலியாவின் வலுவான biosecurity-உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டின் தனித்துவமான சூழல், பொருளாதாரம் மற்றும் சமூகங்களை பாதுகாக்கவென நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படும் மற்றும் அனுமதிக்கப்படாத பொருட்கள் எவை மேலும் இந்த விதிகளை புறக்கணித்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதுதொடர்பில் Melissa Compagnoni மற்றும் Sushen Desai ஆகியோர் தயாரித்த ஆங்கில விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி: Credit card கட்டண நீக்கம் நமக்கு சாதகமா?
06/04/2026 Duración: 09minநாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான நுகர்வோர்களுக்கும் வணிகர்களுக்கும் நிம்மதி தரக்கூடிய ஒரு முக்கியமான அறிவிப்பை Reserve Bank of Australia அல்லது RBA என்ற எமது மத்திய வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Debit, Credit, மற்றும் Prepaid card என்று அனைத்து வகையான card பயன்பாட்டிற்கும் surcharge என்ற மேலதிக கட்டணங்கள் அக்டோபர் முதலாம் தேதியிலிருந்து முழுமையாக நீக்கப்படும் என்று RBA தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இன்றைய செய்திகள்: 06 ஏப்ரல் 2026 - திங்கட்கிழமை
06/04/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 06/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
Have you considered a career in translating and interpreting? - இருமொழி திறன் உண்டா? மொழிபெயர்ப்புத் துறையில் உங்கள் பயணத்தை தொடங்குவது எப்படி?
05/04/2026 Duración: 10minHave you ever considered using your bilingual skills to assist others? A career in translating and interpreting might be for you. In Australia you can train for a TAFE certificate all the way to Master’s degree prior to getting certified. In this episode we help you navigate the pathway to becoming a qualified practitioner. - உங்களுக்கு இருக்கும் இருமொழித் திறமையைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் மொழிபெயர்ப்பு துறையில் தொழில் வாய்ப்பைப் பெறுவது பற்றி Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இயேசு உயிர்ப்பு நாள் தரும் செய்தி!
04/04/2026 Duración: 05minஉலகெங்கும் கிறிஸ்தவமக்கள் கொண்டாடும் இயேசு உயிர்த்த நாள் (ஈஸ்டர்) திருவிழாவை முன்னிட்டு இந்தியாவின் திருவனந்தபுரத்தில் வாழும் அருட்திரு. M. ஆல்பர்ட் அடிகளார் வழங்கும் வாழ்த்துச் செய்தி.