Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
வீட்டில் தீவிபத்துகளைத் தடுக்க என்ன செய்யலாம்?
11/03/2026 Duración: 20minவிக்டோரியா மாநிலத்தில் வாழ்ந்துவரும் கார்த்திக் தணிகைமணி அவர்கள், தீயணைப்புப் படையில் தன்னார்வ தொண்டராகப் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அவரது பின்னணி மற்றும் அனுபவம் தொடர்பிலும் நமது வீடுகளில் ஏற்படக்கூடிய தீவிபத்துக்களை எப்படித் தடுக்கலாம் என்பது குறித்தும் அவர் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அத்துடன் தீவிபத்து சந்தர்ப்பங்களில் காவல்துறையினரின் பணி தொடர்பில் விக்டோரிய காவல்துறை அதிகாரி ராஜேஷ் சாம்பமூர்த்தியும் விளக்கமளிக்கிறார். அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு உயர்வு – பொருளாதாரத்திற்கு நல்லதா கெட்டதா?
11/03/2026 Duración: 13minஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு பல மாதங்களாக வலுவாக உள்ள நிலையில் அது நமது பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் சாமானிய மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பதனை விரிவாக விளக்குகிறார் பெர்த் நகரில் Prime Accounting AU என்ற நிறுவனத்தை நடத்தி வருபவரும் பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம், AI தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல வருடகால அனுபவம் கொண்டவரும், ஆஸ்திரேலியாவின் CA CPA, மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக பல பொருளாதார கட்டுரைகளை எழுதியுள்ள கோவிந்தராஜன் அப்பு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
-
செய்தியின் பின்னணி: மத்திய கிழக்கு மோதல்-ஆஸ்திரேலியா எத்தகைய இராணுவ உதவியை வழங்குகிறது
11/03/2026 Duración: 07minமத்தியகிழக்கில் பதற்றநிலை தொடர்கின்ற பின்னணியில் அப்பிராந்திய வான்வழி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஆஸ்திரேலியா வழங்கும் இராணுவ உதவி குறித்து Briana Charles எழுதிய விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 11 மார்ச் 2026 - புதன்கிழமை
10/03/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 11/03/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இலங்கை: சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளும், ஈரான் போர் எதிர்ப்பு போராட்டமும்
10/03/2026 Duración: 08minசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் அமைப்புகள். அரசியல் கட்சிகள் போன்றவை பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
National கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார் David Littleproud
10/03/2026 Duración: 02minஆஸ்திரேலியாவின் National கட்சித் தலைவர் David Littleproud தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 10 மார்ச் 2026 - செவ்வாய்க்கிழமை
10/03/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 10/03/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
-
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற இயற்கை அதிசயத்தை காண இனி கட்டணம் செலுத்த வேண்டும்
09/03/2026 Duración: 02minவிக்டோரியா மாநிலத்தின் பிரபல சுற்றுலா தலமான Twelve Apostles-ஐப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
அதிகளவான ஆஸ்திரேலியர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கும் புற்றுநோய் எது தெரியுமா?
09/03/2026 Duración: 02minஆஸ்திரேலியாவில் புற்றுநோய் தொடர்பான மரணங்களில் Upper gastrointestinal (GI) புற்றுநோய்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
அகதிகளின் பல்சுகாதாரத்தை ஆராயும் தமிழ் ஆராய்ச்சியாளர் சுவாதி குமார்ஈஸ்வர்
09/03/2026 Duración: 11minதமிழ்நாட்டைச் சேர்ந்த சுவாதி குமார்ஈஸ்வர், தற்போது ஆஸ்திரேலியாவில் தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரின் பல்சுகாதாரம் மற்றும் வாய்சுகாதாரம் தொடர்பான முக்கியமான ஆய்வில் ஈடுபட்டு வரும் அவர், தனது கல்விப் பின்னணி, மற்றும் சமூக அக்கறையுடன் மேற்கொள்ளப்படும் தனது ஆராய்ச்சி குறித்து பகிர்ந்து கொள்கிறார். இந்த உரையாடலில், அவரின் வாழ்க்கைப் பயணத்தையும், ஆராய்ச்சியின் நோக்கங்களையும், அதன் சமூக முக்கியத்துவத்தையும் பற்றி கேட்டு அறிகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
செய்தியின் பின்னணி : இஸ்ரேல்–ஈரான் மோதல் - நமது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள்!
09/03/2026 Duración: 07minமத்திய கிழக்கில் நடைபெறும் மோதல்களின் காரணமாக உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்து வருவதால், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ரமலான் மாதத்தில் இலவச உணவு வழங்கும் சேவைகளை தொண்டு நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து SBS Arabic-இற்காக ஆங்கிலத்தில் Farah Tawfik எழுதிய விவரணத்தை அடிபடையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.
-
இன்றைய செய்திகள்: 09 மார்ச் 2026 - திங்கட்கிழமை
09/03/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 09/03/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (01– 07 மார்ச் 2026)
06/03/2026 Duración: 07minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (01– 07 மார்ச் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி இன்பசேகரன்.
-
செய்தியின் பின்னணி: எண்ணெய், விமானப் பயணம், குடிமக்கள் பாதுகாப்பு – போரின் புதிய முகம்
06/03/2026 Duración: 06minஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை மற்றும் பிற சர்வதேச தரப்புகளின் நிலைப்பாடுகளையும் இணைத்து, இன்று உலக அரசியலில் மிகப் பெரிய அதிர்வாக மாறியுள்ள அமெரிக்கா–இஸ்ரேல்–ஈரான் மோதல் குறித்த சமீபத்திய செய்திகளோடு, செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இலங்கை: யானை - மனித மோதலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்
06/03/2026 Duración: 02minஇலங்கையில் யானை - மனித மோதலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
‘விண்வெளி அறிவியலே எனக்கு அதீத உற்சாகத்தைத் தருகிறது”
06/03/2026 Duración: 08minஆஸ்திரேலியாவில் வாழும் சுக்ருதி நாராயணன் ஒரு பொறியாளர். மட்டுமல்ல, பத்திரிகையாளர், திரைப்பட நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், மூன்று புத்தகங்களை எழுதியிருக்கும் ஆசிரியர் என்று பன்முகம் கொண்டவர். தற்போது 108 நாடுகளை இணைக்கும், 12,000 பெண்கள் பங்கேற்கும் உலகின் முதன் முதலாக பெண்களை மட்டுமே வழிநடத்தும் சந்திர ஆய்வு முயற்சியான “மிஷன் சக்திசாட் (ShakthiSAT)” இன் உலகளாவிய கூட்டாண்மைத் தலைவராகவும், AIMERS Foundation-இன் நிறுவனராகவும் உள்ளார். சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நமது சிறப்பு விருந்தினராக சுக்ருதி அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். அவர் வழங்கிய நேர்முகத்தின் பாகம் 2.
-
இன்றைய செய்திகள்: 06 மார்ச் 2026 - வெள்ளிக்கிழமை
06/03/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 06/03/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
-
108 நாடுகளின் 12,000 பெண்களின் விண்வெளி கனவுகளை வழிநடத்தும் தமிழ் பெண்!
05/03/2026 Duración: 10minஆஸ்திரேலியாவில் வாழும் சுக்ருதி நாராயணன் ஒரு பொறியாளர். மட்டுமல்ல, பத்திரிகையாளர், திரைப்பட நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், மூன்று புத்தகங்களை எழுதியிருக்கும் ஆசிரியர் என்று பன்முகம் கொண்டவர். தற்போது 108 நாடுகளை இணைக்கும், 12,000 பெண்கள் பங்கேற்கும் உலகின் முதன் முதலாக பெண்களை மட்டுமே வழிநடத்தும் சந்திர ஆய்வு முயற்சியான “மிஷன் சக்திசாட் (ShakthiSAT)” இன் உலகளாவிய கூட்டாண்மைத் தலைவராகவும், AIMERS Foundation-இன் நிறுவனராகவும் உள்ளார். சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நமது சிறப்பு விருந்தினராக சுக்ருதி அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். அவர் வழங்கிய நேர்முகத்தின் பாகம் 1.
-
ஈரானின் போர் கப்பல் மீட்பு நடவடிக்கை – இலங்கையிலிருந்து கிடைக்கும் செய்தி
05/03/2026 Duración: 06minஇலங்கையின் தென் பகுதியை அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய கப்பல் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மீட்பு நடவடிக்கையில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
இலங்கைக்கு அருகே மூழ்கிய ஈரான் போர்க் கப்பல்
05/03/2026 Duración: 06minஇலங்கையின் தென் பகுதியை அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய கப்பல் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மீட்பு நடவடிக்கையில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.