Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 247:42:12
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • அதிகளவான ஆஸ்திரேலியர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கும் புற்றுநோய் எது தெரியுமா?

    09/03/2026 Duración: 02min

    ஆஸ்திரேலியாவில் புற்றுநோய் தொடர்பான மரணங்களில் Upper gastrointestinal (GI) புற்றுநோய்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • அகதிகளின் பல்சுகாதாரத்தை ஆராயும் தமிழ் ஆராய்ச்சியாளர் சுவாதி குமார்ஈஸ்வர்

    09/03/2026 Duración: 11min

    தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவாதி குமார்ஈஸ்வர், தற்போது ஆஸ்திரேலியாவில் தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரின் பல்சுகாதாரம் மற்றும் வாய்சுகாதாரம் தொடர்பான முக்கியமான ஆய்வில் ஈடுபட்டு வரும் அவர், தனது கல்விப் பின்னணி, மற்றும் சமூக அக்கறையுடன் மேற்கொள்ளப்படும் தனது ஆராய்ச்சி குறித்து பகிர்ந்து கொள்கிறார். இந்த உரையாடலில், அவரின் வாழ்க்கைப் பயணத்தையும், ஆராய்ச்சியின் நோக்கங்களையும், அதன் சமூக முக்கியத்துவத்தையும் பற்றி கேட்டு அறிகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • செய்தியின் பின்னணி : இஸ்ரேல்–ஈரான் மோதல் - நமது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள்!

    09/03/2026 Duración: 07min

    மத்திய கிழக்கில் நடைபெறும் மோதல்களின் காரணமாக உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்து வருவதால், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ரமலான் மாதத்தில் இலவச உணவு வழங்கும் சேவைகளை தொண்டு நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து SBS Arabic-இற்காக ஆங்கிலத்தில் Farah Tawfik எழுதிய விவரணத்தை அடிபடையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.

  • இன்றைய செய்திகள்: 09 மார்ச் 2026 - திங்கட்கிழமை

    09/03/2026 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 09/03/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

  • இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (01– 07 மார்ச் 2026)

    06/03/2026 Duración: 07min

    ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (01– 07 மார்ச் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி இன்பசேகரன்.

  • செய்தியின் பின்னணி: எண்ணெய், விமானப் பயணம், குடிமக்கள் பாதுகாப்பு – போரின் புதிய முகம்

    06/03/2026 Duración: 06min

    ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை மற்றும் பிற சர்வதேச தரப்புகளின் நிலைப்பாடுகளையும் இணைத்து, இன்று உலக அரசியலில் மிகப் பெரிய அதிர்வாக மாறியுள்ள அமெரிக்கா–இஸ்ரேல்–ஈரான் மோதல் குறித்த சமீபத்திய செய்திகளோடு, செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • இலங்கை: யானை - மனித மோதலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

    06/03/2026 Duración: 02min

    இலங்கையில் யானை - மனித மோதலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • ‘விண்வெளி அறிவியலே எனக்கு அதீத உற்சாகத்தைத் தருகிறது”

    06/03/2026 Duración: 08min

    ஆஸ்திரேலியாவில் வாழும் சுக்ருதி நாராயணன் ஒரு பொறியாளர். மட்டுமல்ல, பத்திரிகையாளர், திரைப்பட நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், மூன்று புத்தகங்களை எழுதியிருக்கும் ஆசிரியர் என்று பன்முகம் கொண்டவர். தற்போது 108 நாடுகளை இணைக்கும், 12,000 பெண்கள் பங்கேற்கும் உலகின் முதன் முதலாக பெண்களை மட்டுமே வழிநடத்தும் சந்திர ஆய்வு முயற்சியான “மிஷன் சக்திசாட் (ShakthiSAT)” இன் உலகளாவிய கூட்டாண்மைத் தலைவராகவும், AIMERS Foundation-இன் நிறுவனராகவும் உள்ளார். சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நமது சிறப்பு விருந்தினராக சுக்ருதி அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். அவர் வழங்கிய நேர்முகத்தின் பாகம் 2.

  • இன்றைய செய்திகள்: 06 மார்ச் 2026 - வெள்ளிக்கிழமை

    06/03/2026 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 06/03/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

  • 108 நாடுகளின் 12,000 பெண்களின் விண்வெளி கனவுகளை வழிநடத்தும் தமிழ் பெண்!

    05/03/2026 Duración: 10min

    ஆஸ்திரேலியாவில் வாழும் சுக்ருதி நாராயணன் ஒரு பொறியாளர். மட்டுமல்ல, பத்திரிகையாளர், திரைப்பட நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், மூன்று புத்தகங்களை எழுதியிருக்கும் ஆசிரியர் என்று பன்முகம் கொண்டவர். தற்போது 108 நாடுகளை இணைக்கும், 12,000 பெண்கள் பங்கேற்கும் உலகின் முதன் முதலாக பெண்களை மட்டுமே வழிநடத்தும் சந்திர ஆய்வு முயற்சியான “மிஷன் சக்திசாட் (ShakthiSAT)” இன் உலகளாவிய கூட்டாண்மைத் தலைவராகவும், AIMERS Foundation-இன் நிறுவனராகவும் உள்ளார். சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நமது சிறப்பு விருந்தினராக சுக்ருதி அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். அவர் வழங்கிய நேர்முகத்தின் பாகம் 1.

  • ஈரானின் போர் கப்பல் மீட்பு நடவடிக்கை – இலங்கையிலிருந்து கிடைக்கும் செய்தி

    05/03/2026 Duración: 06min

    இலங்கையின் தென் பகுதியை அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய கப்பல் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மீட்பு நடவடிக்கையில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • இலங்கைக்கு அருகே மூழ்கிய ஈரான் போர்க் கப்பல்

    05/03/2026 Duración: 06min

    இலங்கையின் தென் பகுதியை அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய கப்பல் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மீட்பு நடவடிக்கையில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • ஆஸ்திரேலியாவுக்கான Temporary Graduate விசா கட்டணம் அதிகரிப்பு!

    05/03/2026 Duración: 02min

    ஆஸ்திரேலியாவில் படிப்பை முடித்த பிறகு வேலை செய்ய அனுமதிக்கும் Temporary Graduate Visa (Subclass 485) தொடர்பான விண்ணப்பக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Osteoporosis வராமல் தடுப்பது எப்படி?

    05/03/2026 Duración: 09min

    பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் Osteoporosis உம் ஒன்று. Osteoporosis பற்றியும் அதை எப்படி தடுக்கலாம் என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கனகரட்ணம் காண்டீபன் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • வயது வேறுபாடின்றி, பெருமை சேர்க்கும் சிட்னி பெண்கள்

    05/03/2026 Duración: 13min

    அனைத்துலக பெண்கள் நாள் - International Women's Day, 2023ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட போது, தமிழ் வளர்ச்சி மன்றம் மற்றும் SydWest பல்கலாச்சார சேவை இணைந்து, Blacktown நகரில் கொண்டாடிய ‘பெண்கள் தின’ விழாவில் கௌரவிக்கப்பட்ட கேஷிகா அமிர்தலிங்கம் மற்றும் காயா ராஜேஷ் ஆகியோரது கருத்துகளுடன் நாம் ஒலிபரப்பிய நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது. 2023ஆம் ஆண்டு நிகழ்ச்சியைத் தயாரித்தவர், குலசேகரம் சஞ்சயன்.

  • அடுக்குமாடி குடியிருப்பிலும் காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய கருவி

    05/03/2026 Duración: 10min

    IMPLUX காற்று விசை சுழலி பல மாடி கட்டிடங்கள் மீது பொருத்தி சுத்தமான மின்சாரம் தயாரிக்க கூடிய ஒரு புதுமையான கருவி. இக் கருவி தன்மீது வீசும் காற்றை உள்வாங்கி அதனை வெளியில் விடாமல் அக்காற்றை ஒரு சுழலிக்கு அனுப்பி மின்சாரமாக உற்பத்தி செய்கிறது. இக்கருவியை கண்டுபிடித்தவர் இலங்கையில் பிறந்து தற்பொழுது சிட்னியில் வசித்து வரும் திரு சுரேஷன் வாகீஸ்வரன். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

  • செய்தியின் பின்னணி: நாட்டின் பொருளாதாரம் (வி)வேகமாக வளர்கிறதா? ஆஸ்திரேலிய குடும்பங்கள் மீதான தாக்கம் என்ன?

    05/03/2026 Duración: 08min

    நாட்டின் பொருளாதாரம் ‘அதிரடி வேக’ வளர்ச்சியைக் காட்டும் அதே நேரத்தில் வீட்டு விலைகளும் பல நகரங்களில் தொடர்ந்து அதிகரிக்கின்றன. இன்னொரு பக்கம் - மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ளதால், எண்ணெய் விலையேறப்போகிறது. இவையெல்லாம் விலைவாசி உயர்வு (inflation) மற்றும் வட்டி விகிதம் (interest rate) குறித்த முடிவுகளை மேலும் சிக்கலாக்குகிறது. இது குறித்த செய்திகளின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • இன்றைய செய்திகள்: 05 மார்ச் 2026 - வியாழக்கிழமை

    05/03/2026 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 05/03/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • 'Home Across Horizon' - சிறுகதை தொகுப்பு

    04/03/2026 Duración: 12min

    Indian Literary and Art Society of Australia சிட்னியில் வெளியிடும் “Home Across The Horizon” ஆங்கில சிறுகதை தொகுப்பு புத்தகத்தில் சிறுகதை எழுதி பங்களித்துள்ள இரண்டு எழுத்தாளர்கள் உமா சீனிவாசன் மற்றும் சுமதி கிருஷ்ணன் ஆகியோருடன் உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

  • இன்றைய செய்திகள்: 04 மார்ச் 2026, புதன்கிழமை.

    04/03/2026 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 04/03/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

página 15 de 98