Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு: வட்டி வீதம் மீண்டும் உயர்த்தப்படுமா?
29/04/2026 Duración: 02minஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மீண்டும் அதிகரித்து, 2023க்குப் பிறகு உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் மீண்டும் மக்களிசைக் கலைஞர்கள் செந்தில் & ராஜலட்சுமி!
29/04/2026 Duración: 17minதமிழ்க் கலை பற்றும் பண்பாட்டுக் கழகம் 14ஆம் ஆண்டாக நடத்துகின்ற சிட்னியில் சித்திரை திருவிழாவில் பங்கேற்க இந்தியாவிலிருந்து வருகை தரவுள்ள மக்களிசைக் கலைஞரகள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகியோருடன் அவர்களின் நாட்டுபுற மற்றும் திரையிசை பயணம், மேலும் சிட்னியில் நடைபெறவுள்ள சித்திரை திருவிழா குறித்து உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
-
மர்மங்கள் ஒரு தொடர்கதை: தப்பிக்கவே முடியாத அமெரிக்க சிறையிலிருந்து கைதிகள் எப்படி தப்பினர்?
29/04/2026 Duración: 12minஉலகின் மிக ஆபத்தான சிறை என்றும், அங்கிருந்து தப்பிச்செல்லவே முடியாது என்றும் கருதப்பட்டது அமெரிக்காவின் Alcatraz தீவிலிருந்த சிறை. அங்கிருந்து யாரும் உயிருடன் தப்பியதில்லை. ஆனால் இந்த சிறையிலிருந்து 1962 ஆம் ஆண்டு மூன்று கைதிகள் தப்பிச் சென்றனர். அவர்கள் எப்படித் தப்பினார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? என்ற சம்பவத்தை ‘மர்மங்கள் ஒரு தொடர்கதை’ எனும் தொடர் நிகழ்ச்சிவழி விளக்குகிறார் இரா. சத்யநாதன். பாகம் – 2. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
செய்தியின் பின்னணி: புதிய இராணுவ தளவாடங்களைத் தயாரிக்கும் ஆஸ்திரேலியா-காரணம் என்ன?
29/04/2026 Duración: 07minஆஸ்திரேலிய அரசு பாதுகாப்புச் செலவுகளுக்காக 1.2 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. இதில், 750 மில்லியன் டாலர்கள் 300 புதிய Bushmaster பாதுகாப்பு வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 29 ஏப்ரல் 2026, புதன்கிழமை
29/04/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 29/04/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இலங்கை: போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் பௌத்த பிக்குகள் கைது
29/04/2026 Duración: 08minகொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
புதிய சாலை விதிகள் தொடர்பில் தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்
28/04/2026 Duración: 02minதெற்கு ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய School Zone- பள்ளி மண்டல வேக வரம்பு விதிகளை மீறுவதற்காக நாளொன்றுக்கு 24 ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
விக்டோரிய ஓட்டுநர்களுக்கான Rego சலுகை: எப்போது, எப்படி விண்ணப்பிப்பது?
28/04/2026 Duración: 02minவாழ்க்கைச் செலவு அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கையாக, விக்டோரியா மாநில வாகன ஓட்டிகளுக்கு வாகன பதிவு கட்டணத்தின் 20 சதவீதத்தை மீண்டும் பெறும் வசதி அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 28 ஏப்ரல் 2026 - செவ்வாய்க்கிழமை
28/04/2026 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 28/04/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
-
மெல்பன் தமிழ் சந்தை 2026
27/04/2026 Duración: 13minAustralian Tamil Chamber of Commerce - Victorian Chapter ஏற்பாட்டில் 'மெல்பன் தமிழ் சந்தை' ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை மற்றும் ஏப்ரல் 25 சனிக்கிழமை Tamil Community Centre Dandenong-இல் நடைபெற்றது. இந்நிகழ்வில் SBS தமிழ் ஒலிபரப்பின் சார்பில் கலந்துக்கொண்டு அங்கு வந்திருந்த சிலரின் கருத்துகளை கேட்டறிந்து தொகுத்து வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்
-
நீங்கள் தனித்தில்லை, நாங்களும் உங்களோடு பயணிக்கிறோம் - சமர்ப்பண்
27/04/2026 Duración: 18minசமர்ப்பண் (Samarpan www.samarpan.org.au ) எனும் அமைப்பு தெற்காசிய நாட்டு பின்னணி கொண்ட மாற்று திறனாளிகளின் மேம்பாட்டுக்கு துணைபுரியும் தன்னர்வ அமைப்பு. சிட்னியில் இயங்கிவரும் இந்த அமைப்பு குறித்தும், மாற்றுத்திறனாளிகளுடனான தங்களின் அனுபவம் குறித்தும் நம்முடன் கலந்துரையாடுகின்றனர் சமர்ப்பண் அமைப்பின் சரண்யா மனோகர் (பொறுப்பு வகிக்கும் தலைவர்), ஜெயஸ்ரீ சங்கர், சங்கர் ராமநாதன் ஆகியோர். SBS ஒலிப்பதிவு கூடத்தில்வைத்து அவர்களை சந்தித்து உரையாடியவர் றைசெல்.
-
இன்றைய செய்திகள்: 27 ஏப்ரல் 2026 - திங்கட்கிழமை
27/04/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 27/04/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி : அமெரிக்காவில் அதிபர் Trump கலந்துகொண்ட விருந்தில் அவரை கொல்ல முயற்சி - நடந்தது என்ன?
26/04/2026 Duración: 06minஅமெரிக்காவில் அதிபர் Donald Trump பங்கேற்ற White House Correspondents' Dinner வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் விருந்தினர் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை கொலை செய்யும் நோக்கத்தில் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (19 – 25 ஏப்ரல் 2026)
25/04/2026 Duración: 05minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (19 – 25 ஏப்ரல் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
-
The overlooked story: Aboriginal and Torres Strait Islander service on ANZAC Day - கவனிக்கப்படாமல் போன கதை: பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் இராணுவ சேவை
24/04/2026 Duración: 09minEach year Australians gather on ANZAC Day to remember those who served in wars, conflicts and peacekeeping missions. But whose stories are we remembering? Are there stories we don’t always hear? In this episode we explore an important part of Australia’s history that has often been overlooked—the service of Aboriginal and Torres Strait Islander peoples. - பல பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள், முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் உட்பட பல சந்தர்ப்பங்களில் ஆஸ்திரேலிய ஆயுதப்படைகளில் சேவை செய்துள்ளனர். ஆஸ்திரேலிய வரலாற்றின் முக்கியமான பகுதியான இது, பல நேரங்களில் கவனிக்கப்படாமல் போன ஒன்றாக காணப்பட்டது. இது தொடர்பில் Rachael Knowles மற்றும் Roza Germian ஆகியோர் தயாரித்த ஆங்கில விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Anzac தினம் ஏன் முக்கியமானது?
24/04/2026 Duración: 07minஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நினைவுகூரப்படும் அன்சாக் தினம் பற்றியும் அது ஏன் கடைப்பிடிக்கப்படுகின்றது என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார் முனைவர் அண்ணாமலை மகிழ்நன் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 24 ஏப்ரல் 2026 - வெள்ளிக்கிழமை
24/04/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 24/04/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
-
தமிழக தேர்தல்: வரலாறு காணாத வாக்குப்பதிவு!
23/04/2026 Duración: 08minதமிழக சட்டப்பேரவை தேர்தல் நேற்று (ஏப்ரல் 23) நடைபெற்றது. வரலாறு காணாத வகையில் தமிழகத்தில் ஏறக்குறைய 85% வாக்குகள் பதிவாகியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 4.85 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி குறித்த விவரணங்களை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
-
செய்தியின் பின்னணி: NDIS மோசடிக் கட்டுப்பாடு - விதிகளை மாற்றும் அரசின் புதிய நடவடிக்கைகள்
23/04/2026 Duración: 06minநாட்டின் முக்கிய சமூக ஆதரவுத் திட்டமான NDIS, தற்போது பெரிய மாற்றங்களைச் சந்திக்கிறது. மோசடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், அதிகரித்து வரும் செலவினங்களைக் குறைக்கவும் அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
மேற்கு சிட்னி விமான நிலையத்திலிருந்து சர்வதேச பயணிகள் விமானசேவை எப்போது தொடங்குகிறது
23/04/2026 Duración: 02minஆஸ்திரேலியாவின் புதிய மேற்கு சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான டிக்கெட்டுகள் விற்பனையாக ஆரம்பித்துள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.