Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 247:42:12
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • குயின்ஸ்லாந்து தமிழ் சமூகத்திற்கான பணியில் 40 ஆண்டுகள்!

    08/05/2026 Duración: 05min

    குயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்கம் (Queensland Tamil Association) தனது 40 ஆண்டுகால சமூக சேவையை, கலைப் பணியை இந்த வாரம் பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்த மைல்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழர் பாரம்பரியத்தின் செழுமையை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், பறை இசை மற்றும் கரகாட்டம் போன்ற வண்ணமயமான நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இது குறித்து நம்முடன் உரையாடுகிறார் குயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கார்த்திக் இளங்கோவன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

  • Women’s legal services in Australia: Understanding your options - ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான என்னென்ன சட்ட உதவி சேவைகள் உள்ளன?

    08/05/2026 Duración: 10min

    Workplace discrimination, gender-based violence and financial inequality—these are just some of the reasons why women need dedicated legal services. You don’t have to navigate the legal system alone. In Australia, free legal services exist to advocate for vulnerable women in ways that are safe, confidential and culturally appropriate. - ஆஸ்திரேலியாவில் பெண்களுக்காகப் பாதுகாப்பான, ரகசியமான மற்றும் கலாச்சார ரீதியாகப் பொருத்தமான வழிகளில் உதவுவதற்கு இலவச சட்ட சேவைகள் உள்ளன. இதுதொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இன்றைய செய்திகள்: 08 மே 2026 - வெள்ளிக்கிழமை

    08/05/2026 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 08/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

  • தமிழகத்தில் புதிய அரசு அமைக்க கூட்டணி உருவாகிறதா?

    08/05/2026 Duración: 09min

    தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிக மிக பரப்பரப்பான சூழலுக்கிடையில் நடந்து முடிந்த நிலையில், தவெக ஆட்சி அமைவதற்கான சாத்தியம் பற்றிய செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

  • செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியா வந்திறங்கிய ISIS தொடர்பு குடும்பங்கள் கைது

    07/05/2026 Duración: 07min

    சிரியாவில் பல ஆண்டுகளாக அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த, ஐ.எஸ். தொடர்புடையதாகக் கருதப்படும் சில ஆஸ்திரேலிய பெண்களும் குழந்தைகளும் ஆஸ்திரேலியாவிற்கு நாடுதிரும்பியுள்ளனர். அதில் சிலர் கைதாகியுள்ளனர். இந்த வருகை தேசிய பாதுகாப்பு, மனிதாபிமானம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு குறித்து ஆஸ்திரேலியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • நமக்கு தெரியாமலே நாம் பிளாஸ்டிக் துகள்களை சாப்பிடுகிறோமா?

    07/05/2026 Duración: 12min

    பிளாஸ்டிக் என்பது, பெட்ரோலிய கச்சா எண்ணையில் இருந்து பெறப்படும் ஒரு செயற்கை பொருள். மேலும், எளிதில் மக்கும் தன்மை கொண்டது அல்ல. Newcastle பல்கலைக்கழகத்தில் பிளாஸ்டிக் துகள்கள் (Microplastics) குறித்து ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் தவமணி பழனிசாமி, பிளாஸ்டிக் மாசு மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் பற்றியும் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் மற்றும் பிளாஸ்டிக் மாசை எவ்வாறு குறைக்கலாம் போன்ற விடயங்களை விளக்குகிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

  • செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலிய டாலர் 4 ஆண்டுகளில் இப்போது உச்சம் தொட்டது!

    07/05/2026 Duración: 10min

    கடந்த சில வாரங்களாக, ஆஸ்திரேலிய டொலரின் மதிப்பு நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் ஒரு பேசு பொருளாக மாறியிருக்கிறது. காரணம் – ஆஸ்திரேலிய டொலர் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டி விட்டது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • மூட்டுகளில் ஏற்படும் சத்தம் Arthritis-மூட்டழற்சி வருவதற்கான அறிகுறியா?

    07/05/2026 Duración: 12min

    Arthritis என்பது வயதானவர்களைப் பாதிக்கும் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் Arthritis பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் விளக்கமளிக்கிறார் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கனகரட்ணம் காண்டீபன் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

  • இன்றைய செய்திகள்: 07 மே 2026 - வியாழக்கிழமை

    07/05/2026 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 07/05/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • ‘சித்திரைதான் தமிழரின் புத்தாண்டு’ – மன்னர் மன்னன்

    06/05/2026 Duración: 18min

    தமிழர் வரலாறு, அடையாளம், தமிழ்த் தேசிய சிந்தனை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றவர் மன்னர் மன்னன் அவர்கள். ஊடகவியலாளர், எழுத்தாளர், ஆய்வாளர், பேச்சாளர் என்று பன்முகம் கொண்ட மன்னர் மன்னன் அவர்கள், தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட பல கலாசார மற்றும் வரலாற்று விவாதங்களில் தனித்துவமான கருத்துகளை முன்வைத்து வருகின்றார். அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். பாகம் 2 (அவரோடு உரையாடலில் கலந்துகொண்டவர் பல்கலைக்கழக மாணவர் அபிராம் அவர்கள்).

  • ‘தமிழருக்கு தமிழன் என்ற பெருமிதம் தேவை‘ – மன்னர் மன்னன்

    06/05/2026 Duración: 13min

    தமிழர் வரலாறு, அடையாளம், தமிழ்த் தேசிய சிந்தனை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றவர் மன்னர் மன்னன் அவர்கள். ஊடகவியலாளர், எழுத்தாளர், ஆய்வாளர், பேச்சாளர் என்று பன்முகம் கொண்ட மன்னர் மன்னன் அவர்கள், தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட பல கலாசார மற்றும் வரலாற்று விவாதங்களில் தனித்துவமான கருத்துகளை முன்வைத்து வருகின்றார். அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். பாகம் 1

  • Vivid சிட்னி ஒளித்திருவிழா விரைவில் தொடங்குகிறது!

    06/05/2026 Duración: 02min

    சிட்னிவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்வூட்டவென பலவண்ண ஒளியூட்டல்கள், இசை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் ஆகியவற்றுடன் Vivid Sydney விரைவில் தொடங்கவுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • தமிழ் உட்பட பல ஆசிய மொழிக் கற்றலுக்கு ஆஸ்திரேலிய அரசு கூடுதல் நிதி உதவி

    06/05/2026 Duración: 02min

    ஆஸ்திரேலியாவில் ஆசிய மொழிக் கல்வியை வலுப்படுத்த ஏதுவாக தமிழ் உட்பட பல மொழிகளைக் கற்றுக் கொடுப்பதற்கு அரசு நிதியுதவியை அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • தமிழ்நாடு 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவு - இவர்கள் கூறுவது என்ன?

    06/05/2026 Duración: 14min

    தமிழ்நாடு 2026 சட்டப்பேரவை தேர்தலில் எதிர்பாராத அமோக வெற்றியை நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பெற்று அட்சி அமைக்க உள்ளது. தவெகவிற்கு அடுத்தபடியாக திமுகவும் அதன் பின் அதிமுகவும் அதிக இடங்களை வென்றுள்ளன. முதல் முறையாக திராவிட கட்சி இல்லாத ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் அமைய போவதாகவும் கருதப்படுகிறது. தமிழ்நாடு 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து நமது நேயர்கள் சிலர் பகிர்ந்துக்கொண்ட கருத்துகளை அடுத்ததாக கேட்போம். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி இன்பசேகரன்.

  • தமிழ் சுயாதீன இசைக்கு புதிய அடையாளம் தரும் Keys & Verses கௌஷிக் மற்றும் விஜய்!

    06/05/2026 Duración: 29min

    மெல்பனைத் தளமாகக் கொண்ட சுயாதீன இசைக் கலைஞர்கள் கௌஷிக் கணேசன் மற்றும் விஜய் ராகவன் ஆகியோர் Keys & Verses Collective என்ற இசைக் குழுவை நடத்தி வருகிறார்கள். 'தமிழா தமிழா' மற்றும் 'AI சந்தரி' உட்பட பல பிரபலமான பாடல்களை வெளியிட்டுள்ள இக்கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு. மெல்பன் கலையகத்தில் அவர்களை சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியாவில் குடிவரவு முகவர்கள் பலர் மீது கடும் நடவடிக்கை

    06/05/2026 Duración: 06min

    ஆஸ்திரேலியாவில் குடிவரவு ஆலோசனை வழங்குபவர்கள் மீது கண்காணிப்பு அதிகரித்துள்ள நிலையில் குடிவரவு முகவர்கள் பதிவு ஆணையத்தின் அலுவலகமான OMARA கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இன்றைய செய்திகள்: 06 மே 2026, புதன்கிழமை

    06/05/2026 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 06/05/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இலங்கை: அதிகரிக்கும் யானை - மனித மோதல்களும், உயிரழப்புகளும்

    06/05/2026 Duración: 08min

    இலங்கையின் கிழக்கு பகுதியில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைக்கும் – மனிதனுக்கும் இடையே மோதல்கள் காரணமாக உயிரிழப்புகளும் சேதங்களும் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • தமிழகத்தில் புதிய அரசு அமைக்க கூட்டணி உருவாகிறது!

    05/05/2026 Duración: 08min

    தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிக மிக பரப்பரப்பான சூழலுக்கிடையில் நடந்து முடிந்த நிலையில், தவெக ஆட்சி அமைவதற்கான சாத்தியம் பற்றிய செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026: பிந்திய தகவல்கள்

    05/05/2026 Duración: 09min

    தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கி, சந்தித்த முதல் தேர்த்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மாபெரும் சாதனையை படைத்துள்ளார் விஜய். விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக வீசிய அலை தமிழக அரசியலை புரட்டி போட்டு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். இதுகுறித்த செய்தியோடு இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

página 3 de 98