Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
செய்தியின் பின்னணி: பிரதமரை சிக்கலில் மாட்டிய ஒரு வார்த்தை
27/02/2026 Duración: 07minபிரதமர் இந்த வாரம் கூறிய ஒரு வார்த்தை அவரை பலத்த விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது. அது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இன்றைய செய்திகள்: 27 பெப்ரவரி 2026 - வெள்ளிக்கிழமை
27/02/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 27/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
-
NSW சாலைகளில் உள்ள மொபைல் கேமராக்களில் வரும் புதிய மாற்றங்கள்
26/02/2026 Duración: 02minNSWஇல் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் நடைபெறும் முக்கிய கேமரா திட்ட மாற்றத்தை முன்னிட்டு, மில்லியனுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு அவசர எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
மறைந்தார் மக்கள் போராளி நல்லகண்ணு: SBS தமிழுக்கு அவர் வழங்கிய நேர்முகம்
26/02/2026 Duración: 11minஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆா்.நல்லகண்ணு அவர்கள் பெப்ரவரி 25 அன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 101. நல்லக்கண்ணு அவர்கள் கடந்த 2005ம் ஆண்டு SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்காணலின் மறுபதிவு இது. நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்
-
உலக விருது பெறும் தமிழ்ப் பெண்மணி மனம் திறக்கிறார்
26/02/2026 Duración: 11minஆசியாவின் நோபல் பரிசான ரமோன் மாக்சசே விருதுகளுக்கான 2017ஆம் ஆண்டின் வெற்றியாளர்களில் ஆறு பேரில் ஒருவராக, (அப்போது) 82 வயதான தமிழ் ஆசிரியர் கெத்சீ சண்முகம் (Gethsie Shanmugam) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஒரு ஆசிரியரான கெத்சீ சண்முகம், மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள விதவைகள், அனாதைகள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கும், மோதல் வலயங்களில் குண்டு வெடிப்புகளினாலும், அச்சுறுத்தல்ககளினாலும் பாதிக்கப்பட்டோருக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கிவந்தவர். கெத்சீ சண்முகம் தனது செயற்பாடுகள் குறித்தும், விருது வாங்கியது குறித்தும் 2017ஆம் ஆண்டு குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசியிருந்தார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.
-
மூலதன ஆதாய வரிச் சலுகைகள்: ‘இளைய தலைமுறையினருக்குக் கொடூரமானவை’
26/02/2026 Duración: 09minவீட்டு வசதிகள் குறித்த செனட் விசாரணையில், வரி சீர்திருத்தத்திற்கான அவசர கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய மூலதன ஆதாய சலுகைகள் பணக்கார முதலீட்டாளர்களுக்கு சாதகமாக உள்ள அதே நேரத்தில் இளைய தலைமுறையினர் வீடு வாங்க முடியாமல் செய்கிறது என்று அதற்காகக் குரல் கொடுப்பவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த வரிச் சலுகைகளைக் குறைப்பது வீட்டு உரிமையை நான்கு சதவீதம் அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலிய தொழிற்சங்க சம்மேளனம் வாதிடுகிறது. வீட்டுவசதியை மேம்படுத்த நிதியளிப்பதாலும், போராடும் வாடகைதாரர்களை ஆதரிப்பதாலும் நிதிநிலையில் 6.5 பில்லியன் டொலர்கள் உதிரி முதன்மை நன்மையாக இருக்கும் என்று Grattan Institute நம்புகிறது. SBS செய்திப் பிரிவினருக்காக Briana Charles எழுதிய ஒரு சிறப்புக் கட்டுரையின் ஆதரவுடன், இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
நாம் வீணடித்து வீசும் உணவினால் சுற்றுசூழல் பாதிக்கப்படுமா?
26/02/2026 Duración: 13minவீட்டில் நாம் வீணடித்து வீசும் உணவு பொருட்களினால் நமது பணம் மட்டும் வீணாவது கிடையாது அது நமது சுற்றுசூழலையும் பாதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? விளக்குகிறது இந்த விவரணம். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி இன்பசேகரன்.
-
இன்றைய செய்திகள்: 26 பெப்ரவரி 2026 - வியாழக்கிழமை
25/02/2026 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 26/02/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியாவின் கேரளா மாநிலத்தின் பெயர் மாறுகிறது!
25/02/2026 Duración: 02minஇந்தியாவின் கேரள மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
மேற்கு ஆஸ்திரேலியாவின் மாபெரும் பொங்கல் விழா!
25/02/2026 Duración: 13minமேற்கு ஆஸ்திரேலியாவின் மாபெரும் “பொங்கல் – தமிழர் அறுவடைத் திருநாள்” பெப்ரவரி 28 சனிக்கிழமையன்று நடைபெறுகிறது. இந்நிகழ்வு குறித்த விபரங்களை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களில் சிலரான சேதுராமன் முத்தையா,சசிதரன் ராதாகிருஷ்ணன், கவிதா குப்புசாமி, சதீஷ் சந்திரசேகரம், அமர்நாத் புஷ்பராஜ், சத்தியபிரகாஷ் நித்தியசாது மற்றும் யுவராஜ் மூர்த்தி ஆகியோரிடம் கேட்டறிந்து கொள்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Your guide to using sunscreen in Australia - ஆஸ்திரேலியாவில் sunscreen பயன்படுத்துவது ஏன் முக்கியம் ? சரியாக பயன்படுத்துவது எப்படி?
25/02/2026 Duración: 10minAustralia’s sun can be harsh. And sunscreen is one key measure protecting us against harmful sun exposure. We asked three scientists about sunscreen facts, myths and choosing the right products. - உலகிலேயே அதிக தோல் புற்றுநோய் விகிதம் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. ஆகவே சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பாக இருக்க சரியான முறையில் sunscreen ஒன்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இது குறித்து Zoe Thomaidou ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேசகரன்.
-
செய்தியின் பின்னணி : Bondi தாக்குதலுக்கு பிறகு நாட்டின் குடிவரவு கொள்கைகளில் மாற்றம் வருமா?
25/02/2026 Duración: 09minஆஸ்திரேலியாவின் குடிவரவு கொள்கைகள் மீண்டும் தற்போது பேசுபொருளாகியுள்ள பின்னணியில் சில கட்சிகள் பயங்கரவாத்தை எதிர்க்கும் நடவடிக்கைகள் நாட்டின் எல்லை கட்டுப்பாடுகளிலிருந்தே தொடங்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.
-
இன்றைய செய்திகள்: 25 பெப்ரவரி 2026 - புதன்கிழமை
25/02/2026 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 25/02/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இலங்கை: காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடி தொடரும் போராட்டம்
24/02/2026 Duración: 08minவலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கிளிநொச்சியில் அவர்களது உறவுகள் ஆரம்பித்த போராட்டம் 09 ஆண்டுகளை எட்டியது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
இந்தியா செல்லும் வெளிநாட்டு பயணிகள் எவ்வளவு தங்க நகைகள் எடுத்துச் செல்லலாம்?
24/02/2026 Duración: 03minஇந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இந்த மாதம் முதல் புதிய சுங்க விதிமுறைகளை இந்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
ஆஸ்திரேலியாவில் விரைவில் வருகிறது உயரமான Trump Tower கட்டிடம் : எங்கு வருகிறது?
24/02/2026 Duración: 02minஆஸ்திரேலியாவின் மிக உயரமான Trump Tower கட்டிடம் விரைவில் உருவாக உள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
இன்றைய செய்திகள்: 24 பெப்ரவரி 2026 - செவ்வாய்க்கிழமை
24/02/2026 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 24/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
-
'எனது மகன் கிறிஸ் மிகவும் அன்பானவன்'
23/02/2026 Duración: 11minமெல்பன் Narre Warren தெற்கில் நடந்த விபத்தில் 16 வயது மாணவன் Chris Rua Antony பலியானமை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். உள்ளடக்க எச்சரிக்கை: இவ்விவரணத்தில் பகிரப்படும் தகவல்கள் சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். Content warning: This episode contains material that may be distressing to some listeners.
-
காலத்துளி: 110 வருடங்களிற்குப் பின் ஜிம்மி தம்போ என்ற பூர்வீக ஆஸ்திரேலியர் நாடு திரும்பியது
23/02/2026 Duración: 03minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் 1994ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ம் நாள், 110 வருடங்களிற்குப் பின் நாடு திரும்பிய ஜிம்மி தம்போ என்ற பூர்வீக ஆஸ்திரேலியரது உடலை அவருக்கு உரித்தான இடத்தில் அடக்கம் செய்தது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
Centrelink உதவித் தொகை உயர்கிறது : யாரெல்லாம் பெறமுடியும்?
23/02/2026 Duración: 02minCentrelink உதவித் தொகை மீண்டும் உயர்த்தப்பட உள்ளதால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைய உள்ளனர். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.